"காந்தி கொலைக்குப் பின்னணி"நூலின் ஆசிரியர் சு.வைத்யாவின் முன்னுரை .....
காந்தியவாதிகள் இன்று ஒரு சங்கடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் காந்தியடிகளைப் பற்றி அதிகம் படித்துத் தெரிந்துகொள்ள முயற்சிக்காததேயாகும். ஆனால் அவர்கள் காந்தியடிகள் சொன்ன நிர்மானத் திட்டப் பணிகளை ஒய்வு ஒழிச்சலின்றி திறமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படிப்பட்டவர்களில் ஒருவன்.
பிரதீப்தால்வி என்பவர் எழுதிய “நாதுராம் கோட்ஸே ஆகிய நான் பேசுகிறேன்” என்ற நாடகத்தை அரங்கேற்ற முயற்சித்த போது டெல்லி மற்றும் பம்பாய் போன்ற நகரங்களில் கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது. அப்பொழுதுதான் இந்த காந்தியவாதிகள் விழித்துக் கொண்டார்கள். இதற்கு முக்கியக் காரணம் பிரகாஷ் ஷா, ஜெகன் ஃபாட்னிஸ் மற்றும் ரமேஷ் ஒஸோ ஆகியோராவர். இந்த நிர்மாண ஊழியர்கள் அந்த நாடகத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து பத்திரிக்கைகளில் ஆட்சேபணைக் குரல் எழுப்பியிருந்தார்கள். குறிப்பாக ஊழியர் பிரகாஷ் அவர்களுடன் நான் நேரடியாகப் பேசியபொழுது மேலும் பல செய்திகள் எனக்குத் தெரிய வந்தன. அதன் விளைவுதான் இந்தச் சிறிய நூலை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது எனக் கூறலாம். எல்லா மதங்களையும் பின்பற்றக் கூடியவர்கள் கண்மூடித்தனமாக தம் மதங்களின் பழக்க வழக்கங்களை மட்டும் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள். தம்மதத்தைத்தவிர பிறமதங்களையும் மதிக்கக்கூடிய மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை. குறிப்பாக, இந்து மதமானது மிகவும் பரந்த மனப்பான்மை கொண்ட மதம் என்பது உலகில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். இந்துமதத்தில் அடிப்படை வாதத்திற்கோ, சகிப்புத்தன்மை யின்மைக்கோ, வன்முறைக்கோ சிறிதும் இடமில்லை. சமீபத்தில் “இன்றைய பி.ஜே.பி.” என்ற பாரதிய ஜனதாக் கட்சியின் பத்திரிக்கையில் ஒரு விசித்திரமான விளக்கம் வெளிவந்திருந்தது. அது என்னவென்றால், கோட்லே வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாகச் செயல்பட்டான் என்பதுதான். இது கோட்ஸே செய்த கொடுரமான கொலைச் செயல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பாரதிய ஜனதாக் கட்சி எடுத்துக் கொண்ட முயற்சியாகத்தான் தெரிகிறது.ஆனால் பாரதிய ஜனதாக் கட்சியை அவ்விதம் சுலபமாக இம்மாபெரும் குற்றத்திலிருந்து விடுவித்துவிட இயலாது.
நான் எழுதியிருக்கும் இச்சிறிய நூலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கம், காந்திஜியின் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லையென்று இன்றளவும் கூறிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்த இயக்கத்தின் தூணாக இருக்கும் இரண்டு பெரும் கொள்கைகள் முஸ்லீம் விரோதப் போக்கும் காந்தி விரோதப் போக்கும் என்பதை யாரும் மறைத்துவிட இயலாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இதை மறைக்க முயற்சித்தாலும் அவர்களுடைய செயல்பாடுகள் அந்த இயக்கத்தின் கூற்றுக்கு மாறாக இருக்கின்றன.
இச்சமயத்தில் சர்வ சேவா சங்கத்தைச் சார்ந்த தாகூர்தாஸ் பங் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இச்சிறு நூலின் மொழிபெயர்ப்பினை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர் பேருதவி செய்துள்ளார். மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார். காந்தியடிகள் தான் பிறந்த மாநிலமான குஜராத்திற்கோ, இந்திய நாட்டுக்கு மட்டுமோ சொந்தமல்ல. இந்த மனித சமுதாயம் முழுமைக்கும் அவர் சொந்தக்காரர். மனித சமுதாயத்தைப் பிரிக்கும் ஜாதி, மத, தேச வரையறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாமனிதர். எனவே காந்தியடிகள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களைப் பற்றியும் அதன்பின்புலன்களைப்பற்றியும் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்வது நம்முடைய கடமையாகும். அதற்காகவே இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாசகர்களிடமிருந்து இப்புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பு எனது முயற்சிக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. இது ஒன்றே எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பெருமையாகும். சத்தியத்தை நோக்கிச் செல்லும் பயணத்திற்கு இப்புத்தகம் உறுதுணையாக இருக்குமென்று நம்புகிறேன்.
- சு. வைத்யா (டிசம்பர் 2000)
விலை - ரூ 40
கிடைக்குமிடம் :
காந்திய இலக்கியச் சங்கம்,
காந்தி நினைவு அருங்காட்சியக வளாகம்,
மதுரை -20
94440588898
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூலாசிரியர்பற்றி
திரு. கணிபாய்வைத்யாஅவர்கள்சர்வோதயத் தத்துவத்தில்ஆழ்ந்தபற்றுக்கொண்டசர்வோதயஇயக்கத்தின்முழுநேரஊழியர். 80 வயதிற்குமேற்பட்டபோதிலும்பூரீவைத்யாஅவர்கள்குஜராத்லோக்சமிதியின்தலைவராகவும்காந்தியத்தத்துவம், மதச்சார்பின்மை, ஏற்றத்தாழ்வற்றசமுதாயம்அமைத்தல்போன்றபணிகளைஆற்றிவருகின்றார்.

இருமுறைசர்வசேவாசங்கத்தின்புத்தகவெளியீட்டுத்துறையில்பணியாற்றுவதற்காககாசிக்குச்சென்றுஅங்குவசித்துவந்தார். வினோபாஜியின்கட்டளையைஏற்றுஅஸ்ஸாமிலேயேதங்கியிருந்து 12ஆண்டுகள்பணியாற்றினார். பின்னர்திரும்பவும்குஜராத்வந்துபூமிபுத்ராபத்திரிக்கையின்ஆசிரியர்பொறுப்பினைஏற்றுக்கொண்டார். நெருக்கடிநிலைப்பிரகடணம்செய்யப்பட்டபோது 7 மாதம்சிறைத்தண்டனைஅனுபவித்தார். பூமிபுத்ராபத்திரிக்கையின்மீதுதணிக்கைக்குழுநடவடிக்கைஎடுத்தபோதுஅரசின்மீதுவழக்குத்தொடர்ந்துஅத்தடையைநீக்குவதில்வெற்றிகண்டார். குஜராத்லோக்சமிதியின்தலைவராகஇருந்துரத்தன்பூர்மாவட்டத்தில்மதுக்கடைகளைமூடுவதற்குக்கிளர்ச்சிநடத்திவெற்றிகண்டார். 1985ஆம்ஆண்டுகுஜராத்தில்நடைபெற்றஇடஒதுக்கீடுகிளர்ச்சியின் போது அமைதிக்குழுஏற்படுத்தி சமரசம்காண்பதில்வெற்றிகண்டார். திரு. வைத்யாஅவர்களின்முயற்சியினால்பனாஸ்நதியின்டெல்டாப்பகுதியில்வாழும்மக்களுக்குநீர்ப்பாசனவசதிகள்செய்வதற்கு 5 ஆண்டுகள்போராடினார். சுமார்பத்தாயிரம்ஏக்கர்நிலத்தில்கார்கில்கார்ப்பொரேஷன்குஜராத்தில்ஆலைஅமைக்கமுற்பட்டபோதுசர்வசேவாசங்கம்மற்றும்குஜராத்சர்வோதயமண்டல்இவற்றின்பிரதிநிதியாகப்பெரும்கிளர்ச்சிநடத்திசுற்றுச்சூழலைப்பாதிக்கும்அந்தஆலைநிறுவப்படுவதைத்தடுத்துநிறுத்தினார். மற்றொருபன்னாட்டுநிறுவனத்திற்குசுகாதாகிராமத்தைச்சேர்ந்த 200 ஏக்கர்நிலத்தைகுஜராத்அரசுவிற்கமுன்வந்தபோதுபெரும்போராட்டம்நடத்திஅம்முயற்சியைத்தடுத்தார். அந்தகிராமமக்கள்அனைவரும்அந்தப்போராட்டத்தில்பங்குபெற்றனர். இதன்விளைவாகநல்லவிளைநிலங்கள்காப்பாற்றப்பட்டன. இன்றும்ஏழைகளுக்குச்சமநீதிகிடைக்கவேண்டும், அவர்கள்மதநல்லிணக்கத்தோடுவாழவேண்டுமென்பதற்காகவாழ்ந்துவருகிறார்.
விவசாயத்திற்குப்போதியநீர்கிடைக்காமல்சிறுவிவசாயிகள்படும்துயரங்களைப்பார்த்துசர்தார்சரோவர்.நர்மதாதிட்டத்தைஅவர்ஆதரித்தார். அதற்காகமக்கள்மத்தியிலேபிரச்சாரம்செய்தார். சமீபத்தில்மதஅடிப்படைவாதம்என்னும்விஷக்காற்றுமக்கள்மத்தியிலேமிகவேகமாகப்பரவிக்கொண்டுவருவதைக்கண்டுஅவர்மிகவும்கவலையுற்றார். காந்திஜியைக்கொலைசெய்தநாதுராம்கோட்லேயின்செய்கையைநியாயப்படுத்தும்செயல்களைஅவர்வன்மையாகக்கண்டித்தார். அதன்விளைவாகத்தான்அவர்இந்நூலைத்தம்தாய்மொழியானகுஜராத்தியில்எழுதியுள்ளார். இந்நூல்தற்போதுஆங்கிலம்மற்றும்பத்துமொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காந்திஜியின்வழிமுறைகள்நாட்டுக்குமிகத்தேவையாகஇருக்கும்இக்காலகட்டத்தில்நம்அனைவரின்நம்பிக்கையையும்வலுவாக்கும்பொருட்டுஇந்நூலைஎழுதியுள்ளார்.
- டாக்டர்பிரவின்சேத் (2000)