காந்தியர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள் என்று எழுதுகிறார் கோபாலகிருஷ்ண காந்தி, இந்து தளத்தில்- On another New Year’s Day: Mahatma Gandhi's 'khorak' a 100 years ago, The Hindu
ஏன்? -நூறாண்டுகளுக்கு முன் இந்நாள், 1.1.1918 அன்று அகமதாபாத்தில் காந்தி ஸ்வராஜ்யம் நிறைவு செய்ய வேண்டிய மனித வாழ்வின் மூன்று அடிப்படைத் தேவைகளை அறிவித்தார்.
ஏன்? -நூறாண்டுகளுக்கு முன் இந்நாள், 1.1.1918 அன்று அகமதாபாத்தில் காந்தி ஸ்வராஜ்யம் நிறைவு செய்ய வேண்டிய மனித வாழ்வின் மூன்று அடிப்படைத் தேவைகளை அறிவித்தார்.
நிறைவு செய்யப்பட வேண்டிய மூன்று அடிப்படை தேவைகள்- காற்று, நீர், தானியம். இவை குறித்து காந்தி சொன்னது:
- காற்று: காற்று எல்லாருக்கும் இலவசமாய் கிடைக்கிறது. ஆனால் அது மாசுபட்டால் நம் உடல் நலத்தைக் கெடுக்கிறது.
- தண்ணீர்: தண்ணீர் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும். அதைக் கோரி மக்கள் சேவகர்களான கவுன்சிலர்களைக் கேள்வி கேட்க பொதுமக்களுக்கு உரிமையுண்டு.
- தானியம்: பேச்சோடு நிறுத்தவில்லை- பயிர்கள் பொய்த்துப் போனதால் வரி விலக்கு அளிக்க வேண்டுமென குஜராத் சபா சார்பில் பம்பாய் அரசுக்கு அன்று கடிதமும் எழுதினார் காந்தி.
தன்னாட்சியமைப்பில் இந்த மூன்று அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்: அப்போதுதான் ஸ்வராஜ்யம் வெற்றி பெற்றதாகும்.
உரிமை: உண்மையான ஸ்வராஜ்யம் மக்களின் மூன்று முக்கிய அடிப்படை கோரிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்- காற்று, தண்ணீர், தானியம் - இதுதான் காந்தி அன்று ஆற்றிய உரையின் சாரம். இதில் காந்தி வெளிப்படையாய்ச் சொல்லாத, ஆனால் அன்று வலியுறுத்திய இன்னொரு கோரிக்கை உண்டு என்கிறார் கோபால்கிருஷ்ண காந்தி. அது கோரிக்கையல்ல உரிமை - கேள்வி கேட்கும் உரிமை.
இந்த உரிமையைப் பயன்படுத்தும் மக்களே மற்ற மூன்று கோரிக்கைகளையும் வென்றெடுப்பார்கள்.
கோபால்கிருஷ்ண காந்தியின் கட்டுரை வாசிக்க- On another New Year’s Day: Mahatma Gandhi's 'khorak' a 100 years ago, The Hindu
கோபால்கிருஷ்ண காந்தியின் கட்டுரை வாசிக்க- On another New Year’s Day: Mahatma Gandhi's 'khorak' a 100 years ago, The Hindu