"ஜெயபிரகாஷ் நாராயணனும் வினோபா பாவேயும் வெவ்வேறு வழிகளில் செல்ல நேர்ந்தது, தேசாய்க்குச் சோதனையான காலம். அவர்கள் இருவரோடும் மிகவும் நெருக்கமானவர். ஜெயபிரகாஷ் நாராயணுடன் கைகோத்துச் செல்லும் கடினமான பாதையையே தேசாய் தேர்ந்தெடுத்தார். வினோபாவிடமிருந்து பிரிய நேர்ந்த அந்த கணத்தைப் பற்றி தேசாய் கூறினார் : “ ‘நாம் பிரிகிறோம். நான் எதிர்க் குழுவில் இருக்கப் போகிறேன்’ என்று அவர் மடியில் சாய்ந்து அழுதவாறே சொன்னேன். அவரைத் தொடுவதை அவர் பொதுவாக அனுமதிப்பதில்லை... நமஸ்கார் - அவ்வளவுதான். ஆயினும், அவர் தனது கைகளை என் தலைமீது வைத்து அரைமணி நேரம் என்னைத் தேற்றினார். ‘உனக்கு எது சரியானதோ அதை நீ செய்கிறாய். இதுதான் உனக்கு மிகவும் சரியானது.’ என்றுதான் சொன்னார். அத்தகைய சுதந்திரத்தை அவர் எங்களுக்குத் தந்தார்.”
நண்பர் கண்ணன் நாராயண் தேசாய்க்காக இந்து தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரை.