"காந்தியடிகளும் வழிபாட்டுத் தலங்களும்"நூலின் ஆசிரியர் ம. நித்யானந்தம் (Saidai Nithyanandam) அவர்கள் எழுதிய முன்னுரை .....

'சும்மாவரவில்லைசுதந்திரம்'என்றுபாடினார்நாமக்கல்கவிஞர். இந்தபாரததேசமேகிளர்ந்துஎழுந்துஆங்கிலேயஆட்சிக்குஎதிராகபோராடிப்பெற்றசுதந்திரம். இதற்குதலைமைதாங்கிவழிநடத்தியவர்மகாத்மாகாந்தியடிகள். நாடுவிடுதலைஅடைந்துவிட்டால்போதுமா? அதனால்எல்லாமக்களும்சமமாகவும், ஒற்றுமையாகவும், கல்வி, பொருளாதாரம்ஆகியவற்றில்சிறந்துவிளங்குவதற்காகவும்தொலைநோக்கோடுநிர்மாணத்திட்டங்களைஅவர்வகுத்துத்தந்தார்.
சத்தியாக்கிரகம்என்னும்அகிம்சைப்போராட்டமுறையால்உலகிற்குஒருபுதியவழிமுறையைக்காட்டினார். சத்தியம், அகிம்சைஆகியவற்றைஇருகண்களாகக்கொண்டு, ஆன்மஒளியின்வழிகாட்டுதலின்படிதனதுவாழ்க்கையையும், இந்ததேசத்தின்விடுதலைபோராட்டத்தையும்அமைத்துக்கொண்டார்காந்தியடிகள்.
காந்தியடிகள்இறைவனின்மீதுஆழ்ந்தபக்திஉடையவர். இளவயதுமுதலேராமநாமத்தைஜெபித்துவந்தவர். ஆனால்அவர்இளவயதில்அதிகமாககோயில்களுக்குசென்றதில்லை. ஆனால்பிற்காலத்தில்பல கோயில்களுக்குச் சென்றார். அதிலும் காந்தியடிகள் அரிஜன யாத்திரை மேற்கொண்டபோது பல்வேறு கோயில்களுக்கு அவர் சென்றார். பல தனியார் கோயில்களை அரிஜன மக்களுக்காகத் திறந்தும் வைத்தார். அக்காலத்தில் நிலவி வந்த சாதிக் கொடுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் அவர் தீவிரமாக எதிர்த்தார். இந்துக் கோயில்கள் மட்டுமல்ல; கிருத்துவர்கள், முஸ்லிம்கள், பெளத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் உள்ளிட்ட அனைத்து மதங்களைச் சார்ந்த வழிபாட்டு இடங்களுக்கும் காந்தியடிகள் சென்றுள்ளார். அத்தனை மதங்களின் சாரங்களையும் அவர் அறிந்து வைத்து இருந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனிமுருகன் கோயில், கன்னியாகுமரி அம்மன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயில், பூரிஜகந்நாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், கல்கத்தா காளி கோயில், திருப்பத்தூர் கிறிஸ்து குல ஆசிரமம், டெல்லி ஜூம்மா மசூதி, அமிர்தசரஸ் பொற்கோயில், இலங்கை புத்தர் விஹார், பாகிஸ்தான் நன்கானா சாகேப் குருத்து வாரா உள்ளிட்ட பல வழிபாட்டுத் தலங்களுக்கும் காந்தியடிகள் சென்று உள்ளார். காந்தியடிகள் கோயில்களுக்குச் சென்றபோதும், தன்னுடைய கடமையை, அதாவது, சுத்தமாக இருத்தல், சுதேசிப் பொருட்கள் உபயோகித்தல், கதர்ப் பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அவர் மறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் கோயில்களுக்குச் சென்றபோது நடந்த சுவையான சம்பவங்களே இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
சர்வோதயம் இதழில் இதைத் தொடராக எழுத அனுமதி அளித்த அதன் ஆசிரியர் திரு. க.மு. நடராஜன் அவர்களுக்கும், முன்னாள் ஆசிரியர் அமரர் திரு. ப. மாரியப்பன் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இக்கட்டுரைகள் தொடர்பாக வெளிவந்தபோதே இதைப் படித்து அவ்வப்போது எனக்கு அறிவுரையும், வாழ்த்துக்களும் வழங்கி, இவை புத்தகமாக வரவேண்டும் என்று முயற்சி எடுத்து, தனது பல்வேறு பணிகளுக்கும் படையில் அணிந்துரையும் எழுதிக் கொடுத்த எழுத்தாளர் மற்றும் ஆய்வறிஞர் திரு. பெ. சு. மணி அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொடர் எழுதுவதற்குபுத்தகங்களைக்கொடுத்துஉதவியகாந்திகல்விநிலையத்தைச்சேர்ந்தடாக்டர்.பிரேமாமற்றும்திரு. சாரங்கன்ஆகியோருக்கும், மகாத்மாகாந்திநூல்நிலையச்செயலாளர்சேர்ந்ததிரு. கு. மகாலிங்கம்அவர்களுக்கும்எனதுநன்றி!
ஞானமேவடிவான திருப்போரூர் கந்தப்பெருமான்கருணையினால்வெளிவரும்எனதுஇந்தஇரண்டாவதுநூலைவெளியிடும்பூங்கொடிபதிப்பகத்தாருக்கும்எனதுநன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
சர்வோதயம்இதழில்இத்தொடரைஎழுதுவதற்குகாரணமாகஇருந்து, இந்நூலுக்குவாழ்த்துரையும்வழங்கியபுதுதில்லி, தேசியகாந்திஅருங்காட்சியகத்தின்இயக்குநர்திரு. அ. அண்ணாமலைஅவர்களுக்கும், உதவியாகஇருந்தசென்னை, காந்திகல்விநிலையத்தின்தலைவர்திரு. K. மோகன்அவர்களுக்கும்இந்தநூலைசமர்ப்பிப்பதில்மகிழ்ச்சிஅடைகிறேன்!
ம. நித்யானந்தம் (9841398516)
முகவரி: 12/T182, கட்டபொம்மன்தெரு, பாரிநகர், ஜாபர்கான்பேட்டை, சென்னை - 600083.
விலை : ரூ. 120/-
கிடைக்குமிடம் : பூங்கொடி பதிப்பகம்
14, சித்திரைக் குளம் மேற்கு தெரு,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
14, சித்திரைக் குளம் மேற்கு தெரு,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
தொலைபேசி : 044-24643074