Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all articles
Browse latest Browse all 219

சூழலியல் பொருளாதார அறிஞர் மார்க்லிண்லே உடன் ஒரு சந்திப்பு .

$
0
0

(குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பாளர் சிவராஜ் அனுப்பிய செய்தி. மதுரையை சுற்றியள்ள நண்பர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்)

இந்த பூமி ஒவ்வொரூ நாளும் அதன் பிள்ளைகளுக்கான உணவை தன் உதிரத்தால் உற்பத்தி செய்துவிடுகிறது.ஏதோவொரு மனிதனின் பேராசை தனக்கு அதிகமாக விழுங்கிக் கொள்ளும் போது எங்கோ ஒரு ஏழையின் உணவையும் களவாடிவிடுகிறார்.நாம் எல்லோரும் உழைப்புக் கேற்ற ஊதியம் குறித்து எங்குநோக்கினும் பேசிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இங்கு உழைப்பின் நலன் மறுக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் உழைப்பு மதிக்கப்படாத நிலையிலும் உள்ள பெண்கள் அவர்களது உழைப்பின் மதிப்பு எப்போது அறியப்படுகிறதோ,அவர்களுக்கான உழைப்பின் பயன் எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் அந்த நாள் தான் கட்டாயம் நாம் எதிர்நோக்கும் பொருளாதார மாற்றம் நிகழும்.
-மார்க் லிண்லே.


                                          
மார்க் லிண்லே ஒரு பயணியாக தன் பாதையை துவங்கினார்.இசை குறித்த அவரது தேடுதல் அவரை இந்தியாவை நோக்கி அழைத்து வந்தது அதன் பிறகு இந்தியாவின் நிலம் எல்லோரையும் போல் அவரையும் ரசவாதம் செய்தது. காந்தியினுடனான,குமரப்பாவினுடனான சந்திப்புக்களுக்குப் பிறகு அவரது வாழ்வு மாற்றமடைந்தது.
ஒரு பறவை தன் பயணத்தில் வந்தமரும் மரக்கிளைகளிளெல்லாம் தனது இனிய கானத்தை இட்டுச் செல்கிறது. லிண்லே தனக்கு உண்மையான குமரப்பாவின் பொருளாதார வடிவத்தை ஏற்றுக்கொண்டு உலகெங்கிலும் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக,ஆய்வாளராக, பணியாற்றியுள்ளார்.

இசைகுறித்த தேடுதலில் இருந்த அவரே பொருளாதாரம் படித்தார்.பொருளாதார அறிஞரானார். அவரது மிக முக்கியமான பணிகள் ஜே.சி.குமரப்பாவினுடைய பொருளாதார வடிவத்தை அதன் சாத்தியப்பாடுகளை உலகெங்கிலும் நடைமுறையிலுள்ள புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களின் பொருளாதார வடிவத்துடன் ஒப்பிட்டு தன் ஆய்வை துவங்கி. தன் ஆய்வின் முடிவாக ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார வடிவத்தையே பூமிக்கும்,மனிதனுக்கும்,சூழலுக்கும் இணக்கமான வடிவமாக ஏற்றுக் கொண்டு பயணிக்கிறார். மார்க் லிண்லே இந்தியாவில்.குறிப்பாக மதுரைக்கு வருகிறார். அந்த தருணத்தில் அவருடன் சந்திப்பு நிகழ்கிறது. ஜே.சி.குமரப்பா தடத்தில் தங்களது சமூக இருப்பை அமைத்துக்கொண்ட சில மனிதர்களுக்கு சிறப்பு செய்கிறோம். Ananda Perumal
காந்தி,குமரப்பா,நம்மாழ்வார் இவர்களின் வழியினை பின்பற்றி இளம் பருவத்திற்கான விருப்பங்களை விடுத்து சமூக விருப்பத்தை தங்கள் விருப்பமாக ஏற்றுக்கொண்டு, அம்பரம் எனும் பெயரில் குழந்தைகளுக்கான சூழலுக்கு இணக்கமான உடைகளை தயாரித்து கொண்டு சேர்க்கின்றனர்.
தங்க நகைகள் ஆபரணங்கள் உருவாக்கம் குறித்த பணியில் இருந்து கொண்டு நாள்தோறும் குப்பையாக சேகராமாகும் சிரட்டைகளை கலை வடிவமாக மாற்றி பயணிக்கும் மனிதர். விருக் ஷாடோன் சிவராஜ்: குமரப்பாவின் வடிவத்தை,பாதையை ஏற்றுக் கொண்டு தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை பெருநிறுவனங்களிடம் விற்றுக் கொள்ளாமல்,ஏழை எளிய மக்களிடம் அதை கொண்டு சேர்க்கும் பயணத்தை மேற்கொள்கிறார். இயற்கை சாயங்களை உற்பத்தி செய்து அதில் உற்பத்தியாகும் உடைகளை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். பொன் மணி அருண் குமார் பெ சாண்டிலியா சுந்தர் : காகிதத்தாள் அதிகார மையமாக மாறிநிற்கும் நிலையில் இயற்கை முறையில் கைகளால் தயாரிக்கப்படும் காகிதங்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் உள்ளம். Karthikeyan Parkavithai Vignesh Selvam
எங்களை வழிநடத்தும் கரங்ளை நோக்கிய சந்திப்பில் எல்லோரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
நம்மாழ்வாரின் அதிர்வுகளை உள்வாங்கி வளர்ந்த பிள்ளைகள்.வேளாண்மை முதன்மையாக ஏற்றுக் கொண்டு ஆதரவற்று நிற்கும் குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கையின் கதைகளை உருவாக்கும் பணியாக நூலகத்தை ஒரு இயக்கமாக மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின்பிறப்பும்,பணிகளும்,காந்தி,குமரப்பா,நம்மாழ்வார் இவர்களின் பாதைகளை ஏற்றுக்கொண்டு,அவர்களின் உள்ளன்புகளை ஏற்றுக்கொண்டு பயணிக்கும் நண்பர்களின் ஒன்றுபட்ட முயற்சியே. பெருகும் கழிவுகளிலிருந்து நம் மண்ணையும் மக்களையும் மீளச் செய்யும் நோக்கோடு "மீள்"ஆவணப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலகமய போக்கில் தற்சமய கழிவு கையாளும் முறைமைக்கு மாற்றை முன்வைக்கும் ஒரு வலிய ஆயுதமாக, எளிய நம்பிக்கையாக "மீள்"ஆவணப்படம். மீள் ஆவணப்பட முன்னோட்டம் நிகழ்வில் திரையிடப்படுகிறது. ஒவ்வொரு கூடுதலிலும் நம் கரங்கள் வலுப்பெறுகின்றன,நாம் நமது பெருவெளியை கண்டடைகிறோம், ஆதிநிலம் - பனை - நூற்பு
தொடர்புக்கு : பூபாளன் ராகவன் 9787978700

Viewing all articles
Browse latest Browse all 219

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!